தொகுப்பு: ஆதம் A. அப்துல் குத்தூஸ் (மதுக்கூர்‍) - camp Dubai.

தொகுப்பு: ஆதம் A. அப்துல் குத்தூஸ் (மதுக்கூர்‍) - camp Dubai.

ஞான வெளிப்பாடு

சங்கைக்குரிய குத்புல் அக்தாப் ஜமாலிய்யா
அஸ்ஸய்யிது யாஸீன் மௌலானா (ரலி) அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகமவர்களின்
வாரிதாத்து (ஞான வெளிப்பாடு)

எனது இரட்சகனின் அலுவல்களிலே எனக்கு இடைவெளி என்பது கிடையாது. அந்த அலுவல்கள் எனக்கு இன்பமளிக்கும் உணவாகவும், ஆகாரமாகவும் இருக்கின்றது.

என் இறைவன் தனது நாட்டத்துக்கும் பொருத்தத்துக்கும் நேமமாக என்னைச் செயல்படவும் அமைதியுறவும் செய்கிறான். சங்கைகளை அருள்புரிகிறான்.

இந்த என்னுடைய காலத்தவர்களில் நிச்சயமாக எவருமே நான் அனுபவித்த பேரானந்தத்தின் அளவுக்கு அனுபவிக்கவில்லை. அவ்வாறான அருட்கொடைகளையும் கண்ணியத்தையும் பெற்றேன்.

நான் ஹக் (இறை) அல்லாத ஒன்றல்ல; ஹக் (இறை) எனது தோன்று துறையாகும். அது நான் எங்கு திரும்பினும் எனக்கு உதவியாளனாக இருக்கின்றது.

நான் எனது தலைவர் எனது பாட்டனார் கௌதுல் அஃலம் அல்லாத ஒன்றல்ல. எனது கண்கள் அவர்களைத் தரிசித்த வண்ணமாகவே உள்ளது. அவர்கள் என்னுடன் நேமமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

எனது கல்பாகிறது அல்லாஹ்வுடைய சிம்மாசனமாகவும் ஆலயமாகவும் இருக்கிறது. எனது சரீரமோ என் இறைவன் அதில் வெற்றியுடன் வெளியாகி இருக்கின்றான்.

எனது ஜீவியத்தின் ஒவ்வொரு இரவும் லைலத்துல் கத்ரு இரவாக இருந்து கொண்டிருக்கிறது. எனது ஆத்மா (ரூஹு)வாகிறது அதிலே அதன் (தகுதி) கொண்டு நீங்காத பரவசம் கொண்டுள்ளது.

 -கலீபா அப்துல் கறீம் ஆலிம் ஜமாலி அவர்களுக்கு அனுப்பிய பட்டோலையிலிருந்து... 

வஹ்ததுல் வுஜூது

 ஏக காட்சி ‍ - வஹ்ததுல் வுஜூது

அதுவே ஏகமயமானது (அனைத்தும் அதுவேயாதலால்) அதனைத் தவிர்ந்த வேறு பொருட்கள் அதனுக்கு (அயலாய்) இல்லை.

அதுவே பூரணமானது. அதுவே குறுக்கமானதன்று.

இப்பொழுது அது மாறுபட்டுள்ளது. எனினும் அது பெருமைக்குரிய பழமையை (முன்னிருந்ததை)ப் போன்றது.

எங்கே? என்பதும் ஒன்றைப் போன்றது என்பதும் ஒன்றைக்கொண்டு (ஆனது) என்பதும் எப்படி? என்பதும் அதற்கில்லை.

(நான், நீ, அவன், அவள், நாங்கள், நாம், அவர்கள், இவர்கள், அது, இது, அவை, இவை முதலாம்)

பிரதிப் பெயர்கள் அனைத்தும் அதனைக் கட்டு(மட்டு)ப்படுத்துபவையன்று.

உள்ளாலும் வெளியாலும் அதன் தாற்பரியத்திலே அதற்கு (இப்படித்தான் எனும்) சுபாவம் (பாங்கு) இல்லை.

அதன் பிரணவ உள்ளமை பரிசுத்த சம்பூரணமாகும்.

ஏக மயத்தில் எவன் தன்னை அழித்தானோ அவனிடத்திருந்து அனைத்தும் தோன்றும்; வெளியாகும்.

 - சங்கைமிகு அஷ்ஷெய்கு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்