அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகத்ஹு

பேச்சுப் போட்டியின் நேரடி ஒலிப்பரப்பு

அன்புடையீர், அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)

13/01/2017 வெள்ளி அன்று சரியாக மாலை 6:30 மணியளவில் (மஃரிப் தொழுகைக்கு பின்) அத்தரீக்கத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில் அமீரகம் த‌ழுவிய‌ உத்தமத் திருநபி (ஸல்) அவர்களின் உதய தின விழா சிறப்பு நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக (கௌதுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலி அவர்களின் நினைவு தினம், நூல் வெளியீடு) மிக சிறப்புடனும் வெகு விமர்சையாகவும் நடைந்தேறியது.

நிகழ்வின் காணொளி பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளதை காண்க‌:

பதிவு: மதுக்கூர் ஆதம் A. அப்துல் குத்தூஸ் ‍- துபை

========================================================

தமிழ் இந்து நாளிதழ்-லில் 04.12.2014 அன்று வெளியான தினசரி நாளிதழ்;-ஹெச்முஜிபுர்ரஹ்மான்(அவர்கள்)ஆக்கத்தில் வெளியானது;-
....
சூபித்துவக் கல்வியானது மார்க்கச்சட்டக் கல்வியைப் போன்று வெறும் புத்தகத்தின் வாயிலாகவோ வெளிப்புற அறிவின் (Explicit Knowledge) மூலமாகவோ கற்றுக்கொள்வதை விட உள்ளத்திலிருந்து உள்ளத்துக்கு (Heart to Heart) என்ற முறையிலேயே பெரும்பாலும் கற்பிக்கப்படுகிறது.

Read more...

மீலாது பெருவிழா நிகழ்ச்சியின் நேரடி ஒளிப்பரப்பை இங்கே காணவும்

 

அத் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா தரீக்கா ஏற்பாடு செய்து நடத்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீலாத் தின விழா வெலிகாமம், இலக்கம் 52, புஹாரி மஸ்ஜித் மாவத்தை, "பைத்துல் பரகாஹ்" இல்லத்தில் அத் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் ஆன்மிகத்தலைவர் அஷ்ஷெய்கு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவுன் அல் ஹஸனிய்யுல் அல் ஹுஸைனிய்யுல் அல் ஹாஷிமிய் மௌலானா (வாப்பா நாயகம்) அவர்களின் தலைமையில் எதிர் வரும் 9-ஆம் திகதி முதல் 12-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 9-ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு புனித "புர்தா ஷரீப்", மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு "ரசூல் மாலை" ஓதப்படும். 10-ஆம் திகதி சனிக்கிழமை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து அத் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் புனித "ராத்திப் மஜ்லிஸ்" நடைபெறும். 11-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புகழ்பாடும் “ஸுப்ஹான மௌலூத்” ஓதப்படும். 12- ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உலமாக்கள் கலந்து கொள்ளும் பயான் நிகழ்ச்சி நடைபெறும்.

சங்கைமிகு ஜமாலியா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் அறபு மொழியில் இயற்றிய ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மௌலானா (ரலி) அவர்கள் மௌலிது ஷரீஃப், சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் தாகிபிரபம் நூல் ஆங்கில மொழி பெயர்ப்பு நூற்கள் வெளியிடப்படும்.

01. என்னை நேசித்தவர் மறுமையில் என்னுடன் இருப்பார்.

(நபி மணிமொழி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)

Read more...